Ticker

6/recent/ticker-posts

Ad Code



வடக்கு - கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா


வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற இறுதிப் போர் உண்மையில் போர் அல்ல, விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த மக்களையும் இடங்களையும் மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை என முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடன் இறுதியாக நடத்திய சண்டை போர் அல்ல. அது மனிதாபிமான நடவடிக்கையாகும்.

அது மனிதாபிமான நடவடிக்கையாக இல்லாமல் இருந்திருந்தால் சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களைப் படையினர் கொன்றிருப்பார்கள்.

காயமடைந்த விடுதலைப் புலிகளுக்குக் கூட வைத்தியம் செய்தோம். அவர்களுக்கு உணவளித்தோம்.

விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களை இடங்களை மீட்டு முழு நாட்டுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையே அது.

விடுதலைப் புலிகள் தலதா மாளிகையைத் தாக்கினார்கள். காத்தான்குடி பள்ளிவாசலைத் தாக்கினார்கள். சிறிமாபோதியைத் தாக்கினார்கள்.

அரந்தலாவை பிக்குகளை கொலை செய்தார்கள். ஆனால், எமது மனிதாபிமான நடவடிக்கையின் போது எந்தவொரு வணக்கஸ்தலங்களையும் அழிக்கவில்லை” என தெரிவித்தார்.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments