
ஐபிஎல் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வுபெறவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து அவரே பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் நடப்பு தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்து, தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை அகமதாபாத்தில் எதிர்கொண்ட சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்த மேட்ச்சுடன் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவின. இதனால் இன்றைக்கு அகமதாபாத் மைதானத்தில் ஏராளமானோர் மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்து வந்திருந்தார்கள்.
இந்நிலையில் வெற்றிக்கு பின்னர் தோனியிடம் ஓய்வு பெறுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தோனி, ‘ கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை, ஆனால் நான் திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை.
இன்னும் நிறைய நேரமிருக்கிறது யோசித்து முடிவெடுப்பேன் என்று பதில் அளித்தார். அவரது இந்த பதிலால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக சென்னை அணி 10 ஆவது இடத்தில் லீக் மேட்ச்சுகளை முடித்து மோசமான ரிக்கார்டை இந்த சீசனில் ஏற்படுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments