
ரஷ்யா - உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடும் அதிருப்தியில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) முற்றிலும் பைத்தியமாகி விட்டார் என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு உண்டு, ஆனால் அவருக்கு ஏதோ நடந்துவிட்டது.
அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார், அவர் தேவையில்லாமல் நிறைய பேரைக் கொல்கின்றார். நான் வீரர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை.
எந்த காரணமும் இல்லாமல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உக்ரைனில் உள்ள நகரங்களில் சுடப்படுகின்றன.
அவர் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் விரும்பவில்லை, முழு உக்ரைனையும் விரும்புகிறார் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், ஒருவேளை அது சரியாக இருக்கலாம்.
அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், புட்டின் செய்வது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனின் (Ukraine) ட்ரோன் தாக்குதலில் இருந்து ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin) நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் மே 20 ஆம் திகதி நடந்ததாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குர்ஸ்க் பகுதிக்கு புடின் உலங்குவானூர்தியில் சென்று கொண்டு இருந்த போது, அதன் பாதையை நோக்கி ட்ரோன் ஒன்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.
அதனை இடைமறித்து ரஷ்ய வான் பாதுகாப்புப் படை அழித்த நிலையில், இதன் மூலம் உலங்குவானூர்தியில் இருந்த புடின் உயிர் தப்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்ஸ்க் வான்வெளியில் உக்ரைன் ட்ரோன்கள் எவ்வாறு அத்துமீறி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments