Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகில் தலைநகரம் இல்லாத ஒரே நாடு எது தெரியுமா? 99% பேருக்கு தெரியாது!


பொதுவாக, எந்தவொரு மாநிலத்திற்கும் அல்லது நாட்டிற்கும் ஒரு தலைநகரம் இருக்கும். அங்கு அனைத்து வகையான நிர்வாகப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், உலகில் தலைநகரம் இல்லாத ஒரு நாடு உள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள பல நாடுகள் தங்களின் பல்வேறு சிறப்புகளுக்காகப் பெயர் பெற்றவை. சில நாடுகள் குறைந்த மக்கள்தொகைக்குப் பெயர் பெற்றவை என்றால், சில நாடுகள் விசித்திரமான விஷயங்களுக்குப் பெயர் பெற்றவையாக இருக்கும். அதேபோல், ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்த விதிகள் மற்றும் சட்டங்கள் இருக்கும். அவற்றை அங்குள்ள மக்கள் பின்பற்றுவார்கள்.

மேலும், அரசாங்கம் அதன் மக்களுக்குச் சிறந்த வசதிகளை வழங்குகிறது. இதனால் மக்கள் கவலையின்றி அங்கு வாழ்கின்றனர். பொதுவாக, எந்தவொரு மாநிலத்திற்கும் அல்லது நாட்டிற்கும் ஒரு தலைநகரம் இருக்கும். அங்கு அனைத்து வகையான நிர்வாகப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் முக்கியமான அரசு அலுவலகங்களும் அதன் தலைநகரிலேயே செயல்படுகின்றன.

ஆனால், தலைநகரம் இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. இந்த நாட்டின் பெயர் நவ்ரு (Nauru). இது மைக்ரோனேஷியா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய தீவுகளின் குழுவால் ஆன ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது நவ்ரு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாடு 21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தலைநகரம் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடு இதுவாகும். வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அங்கு பழங்குடியினர் பாரம்பரியமாக ஆட்சி செய்தனர். அங்குள்ள மக்கள் தேங்காய் உற்பத்தி செய்வதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.

இங்கு மக்கள்தொகையும் மிகக் குறைவு. ஆனாலும், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்த நாடு பங்கேற்கிறது. இந்த நாட்டின் தேசிய நாணயம் ஆஸ்திரேலிய டாலர் ஆகும். நவ்ருவில் பவளப்பாறைகள் மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன. இவை ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments