
தூக்கத்தைத் தவிர்க்கப் பலரும் காப்பியை அன்றாடம் அருந்துவார்கள். ஆனால் காப்பி குடிப்பதால் ஆயுளை நீட்டிக்க முடியுமா?
அமெரிக்காவின் ஊட்டச்சத்து சங்கத்தைச் (American Society for Nutrition) சேர்ந்த விஞ்ஞானிகள் காப்பி அருந்தும் பழக்கத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.
காப்பி குடிப்பதால் ஆயுளை நீட்டிக்க முடியும், மேலும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க முடியும் என்று அவர்கள் ஒரு புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நாள்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரியவந்தது.
விஞ்ஞானிகள் 1970 முதல் 47,000 பெண்களை ஆய்வெடுத்தனர். அவர்களில் 3,700 பெண்கள் தினசரி காப்பி அருந்தினர்.
அவர்களுக்குச் சீரான உடல்நலனும் மனநலனும் இருந்தன. அவர்களுக்கு இப்போது 70க்கும் மேல் வயதிருந்தாலும் புற்றுநோய், கல்லீரல் நோய், இதய நோய், நீரிழிவு நோய், ஞாபக மறதி நோய், Parkinson's நோய் ஆகிய நோய்களை அவர்கள் தவிர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காப்பி அருந்துவோருக்குச் சீரான உடல்நலன் இருப்பது வெறும் தற்செயல்தானா அல்லது காப்பி அருந்துவது சீரான உடல்நலனுக்குக் காரணமா என்பது ஆய்விலிருந்து தெரியவில்லை.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments