Ticker

6/recent/ticker-posts

Ad Code



100 வது பிறந்த நாளை எட்டிய மகாதீர் முஹம்மத்!


''எப்போதும் செயலாற்றிக்கொண்டிருங்கள்'' மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மத் தனது 100வது பிறந்தநாளில் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் கூறிய அறிவுரை இதுவாகும்!

மஹாதீர் முகம்மத் மலேசியாவின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர்; இவர் 1925ம் ஆண்டு ஜூலை 10ம் திகதியன்று மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள அலோர் ஸ்டார் நகரில் பிறந்தார்.

சிங்கப்பூரிலுள்ள மலாயா பல்கலைக் கழகத்தில் மருத்துவக் கல்வி பயின்று, மருத்துவராகப் பட்டம் பெற்றவரான இவர், 1946ல் உம்னோ (UMNO - United Malays National Organisation) கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார்.

1964ல் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், 1969 தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.
1976ல் துணைப் பிரதமராகப் பதவி வகித்த பின்னர், 1981ல் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்று, 22 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றினார்; இது மலேசிய வரலாற்றில் மிக நீண்ட பதவிக் காலமாகும்; அதனால் இது உலக அளவில் ஒரு அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.

இந்தக் காலத்தில் மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு இவர் முக்கிய பங்காற்றினார். அதனால் "நவீனமயமாக்கலின் தந்தை" (Father of Modernisation) என்று புகழப்பட்டார்.

மலேசியாவை ஒரு தொழில்மயமான நாடாக உருவாக்குவதற்கு "விஷன் 2020" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு, 2020ல் அரசியல் நெருக்கடி காரணமாக பதவி விலகினார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், செபாங் மோட்டார் பந்தயப் பாதை போன்ற முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களை இவரே மேற்கொண்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து மலேசியாவுக்குள் அரசியல் நெருக்கடிகள் ஏற்படலானது. இது மலேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவரது 100வது பிறந்தநாள் மலேசியாவிலும் உலக அளவிலும் பெரிதும் கவனிக்கப்பட்டது; அவர் இன்னும் அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் கருத்துத் தெரிவித்து வருகிறார். அவரின் தேகாரோக்யம் சிறப்புற வாழ்த்துக்கள்!

செம்மைத்துளியான்.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments