
இந்தோனேசியாவில் கடத்தப்பட்ட 6 சிசுக்களை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அவற்றுள் 5 சிசுக்கள் சிங்கப்பூரில் விற்கப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
எஞ்சிய ஒரு சிசு இந்தோனேசியாவின் பொன்தியானாக் நகருக்குக் கொண்டு செல்லப்படவிருந்தது.
6 சிசுக்களும் பிறந்து 2 அல்லது 3 மாதங்களே ஆகியிருக்கின்றன.
குழந்தை கடத்தும் கும்பலை இந்தோனேசிய அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு முதல் அந்தக் கும்பல் 24 சிசுக்களை விற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
அவற்றில் 15 சிசுக்கள் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டதாக மேற்கு ஜாவா குற்ற விசாரணை துறை இயக்குநர் சுரவான் (Surawan) CNA-இடம் கூறினார்.
சிங்கப்பூருக்கு அனுப்பப்படவிருந்த 5 சிசுக்களும் இங்குத் தத்தெடுக்கப்படவிருந்ததாகச் சந்தேக நபர்கள் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட குழந்தைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக சுரவான் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட 6 சிசுக்களும் சிகிச்சைக்காக பாண்டுங் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அடையாளம் தெரியாதோர் தம் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக ஒரு பெற்றோர் புகார் அளித்த பின்னர் அந்தக் கும்பல் பற்றி தெரியவந்ததாக சுரவான் தெரிவித்தார்.
விளம்பரம்
சிங்கப்பூருக்குக் கடத்தப்படவிருந்த ஒவ்வொரு குழந்தையும் பல மில்லியன் ரூப்பியாவிற்கு விற்கப்பட்டதாக CNN Indonesia செய்தி நிறுவனம் சொன்னது.
பெற்ற அம்மாக்களுக்கு 11 மில்லியன் ரூப்பியா முதல் 16 மில்லியன் ரூப்பியா வரை கொடுத்து சிசுக்கள் வாங்கப்பட்டதாக அது கூறியது.
சிசுக்களில் சிலர் கடத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments