Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-199


குறள் 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

மத்தவங்க வெக்கப்படக் கூடிய செயல்களை வெக்கப்படாம  ஒருத்தன் செஞ்சாமுன்னா, அறம் வெக்கப் பட்டு அவனை விட்டு போயிரும். 

குறள் 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

தவறான செயல்களுக்கு வெக்கப்படுத குணம் இல்லாதவங்க இயங்குதது எப்படியிருக்கும் தெரியுமா?  மரப் பொம்மை ஒண்ணு  அதுல கட்டி இருக்க நூல் மூலம் உயிருள்ளது மாதிரி இயங்குமே அது மாதிரி இருக்கும். 

குறள் 1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

தன்னோட குடும்பத்தையும் நாட்டையும் ஒசத்தணும்னு செயல் படக்கூடிய ஒருத்தனுக்கு கடவுளே முன்னால வந்து நின்னு ஒதவுவார். 

குறள் 1026
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

ஒருத்தனோட நல்லாண்மைங்கிறது, தான் பிறந்த குடியை ஆளக்கூடிய சிறப்பை தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வது.

குறள் 1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

நல்லபடியா உழவுத் தொழில் செஞ்சு வாழுற உழவர்கள், தங்களோட அரசின் குடை நிழலை, வேற அரசுகளின் குடை நிழல்களில் வாழ்ற மக்களும் விரும்பும்படி செய்வாங்க. 

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments