
கண்களின் வார்த்தைகள் அறிவாயோ?
களவிடும் வழியெனப் புரிவாயோ?
கனவிலும் காவியமிடும் தெரியாதோ?
கண்டதும் மயங்கிடும் காளையரே
கண்ணோடு கண்கள் பேசி
கன்னத்தோடு கன்னம் உரசி
கனிந்திடும் அன்பிற்கு விலை பேசி
கண்ணாலேனே போகாதே கை வீசி.
கல்லோடும் மரம் வளரையிலே
கன்னியின் மனமதில் காதல் மலராதோ
கயவனே கொள்ளையிட்டாய் நெஞ்சம்
கயல் என்னோட விழியிலே தூக்கம் பஞ்சம்.
கடத்தாதே நாட்களை நீயும் கொஞ்சம்.
கருத்தம்மா வீட்டுக்கு அழைத்து வா
கருகப்பட்டி மாமனை விரைவாக
கலியாணச் செய்தியிட நாள் பார்க்க
கலங்க விடாமல் விளங்கி நீயும் ஓடி வா.
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments