
குறள் 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
வேலை பார்த்து அதுல வார வருமானத்தை வச்சு தான் வாழணும்னு நெனைய்க்கவங்க, அடுத்தவங்க கிட்ட சாப்பாட்டுக்காக கை ஏந்த மாட்டாங்க. அவங்க கிட்ட சாப்பாடுன்னு கேட்டு வாரவங்களுக்கு, இல்லைன்னு சொல்லாம கொடுத்து ஒதவுவாங்க.
குறள் 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
வயல்ல உழுபவங்க அவங்க தொழிலை விட்டுட்டா, முற்றுந் துறந்த முனிவர்கள் கூட நிலை குலைஞ்சு போயிடுவாங்க.
குறள் 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
வயல்ல ஒரு குத்து புழுதியை கால்வாசி ஆகும்படியா காயவச்சு பயிர் செஞ்சா, ஒரு பிடி உரம் கூட போடமலே பயிர் நல்ல செழிப்பா வளரும்.
குறள் 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
ஏர் உழுறது, வயலுக்கு உரம் போடுறது, களை எடுத்து தண்ணீர் பாய்ச்சுறது, இது எல்லாம் நல்லதுதான். அதை விட பயிரை பாதுகாக்கது ரொம்ப நல்லது.
குறள் 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
வயலுக்குச் சொந்தக்காரன் வயலை சரியா கவனிக்காம விட்டுட்டாம்னா, அவங்கிட்ட கோவப்பட்டு வெலகியிருக்கும் பெஞ்சாதி மாதிரி வயலும் வாடி வெளச்சல் இல்லாமப் போயிரும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments