
இமயத்தின் உச்சியென
உயர்ந்திட்ட உன்னதன்
எந்தன் கனவெனும்
மாளிகையின் மன்னவன்!
அன்னவனின் பின்எந்தன்
பேதைமனம் பற்றியது
இன்றவன் என்னவன்
தென்னவன் மன்னனவன்
உள்ளமெனும் மலர்வீதியில்
உலவிவரும் தென்றலவன்
பொதிகை மலைபிறந்த
மலர்வனம் எந்தன்
மனமெனும் மாளிகையில்
ஆட்சிசெய்யும் அரசன்!
காலமெனும் கடலிலே
மலர்கிறேன்
என்னவனின் நெஞ்சத்தில்
வண்ண மலரென!
வசந்தா பாபாராஜ்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments