
மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்த 70க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
பாலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அந்தக் குழுவைப் பயங்கரவாத அமைப்பு என்று வகைப்படுத்தியுள்ளது.
அந்தக் குழுவுக்கு ஆதரவாய் இரண்டாவது வாரம் போராட்டம் தொடர்கிறது.
பிரிட்டன் சட்டப்படி அந்தக் குழுவை ஆதரிப்பது சட்டப்படி குற்றம். மீறுவோருக்கு 14 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பிரிட்டனில் சுமார் 81 அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆர்வலர்களுக்கு ஆதரவளிக்கும் சிலர் ஆகாயப் படைத் தளத்துக்குள் புகுந்து இரண்டு விமானங்களைச் சேதப்படுத்தினர்.
அது சுமார் 9.4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments