ஹெல்தியான உணவுப்பட்டியலில் இட்லியும் ஒன்று. அதில் பெப்பர் சேர்த்து சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை சேர்க்கும். குறிப்பாக மிளகில் இருக்கும் நன்மைகள் மழைக்கால தொந்தரவுகளுக்கு மிகவும் நல்லது. எனவே இந்த சீசனுக்கு ஏற்ற வகையில் பெப்பர் இட்லி எப்படி செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம். ரெசிபி இதோ…
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு
மிளகு - 1 tbsp
கடுகு - 1/2 tsp
நெய் - 2 tbsp
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் மிளகுத்தூளை எண்ணெயில் வறுத்து ஆற வைத்து அதில் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் எப்போதும் போல் இட்லி சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாயில் நெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பின் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது சுட்ட இட்லிகளை சேர்த்து அதன் மேல் பொடித்த மிளகுத்தூளை தூவி பிரட்டி எடுங்கள்.
இதில் தேவைப்பட்டால் கூடுதல் சுவைக்காக வெங்காயம், குடைமிளகாய் வதக்கியும் சாப்பிடலாம்.
அவ்வளவுதான் நெய் மணக்க பெப்பர் இட்லி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டியான தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி சிறப்பாக இருக்கும்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments