
மகனுக்காக அர்த்த ராத்திரியில் பழம் பறிக்கச் செல்லும் 82 வயது தந்தை இணையவாசிகளின் அன்பைச் சம்பாதித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த அவர் அதிகாலை 3 மணிக்குப் பெரிய மூங்கில் கூடையைத் தூக்கிக்கொண்டு டார்ச் வெளிச்சத்தில் புறப்படுவது CCTV காணொளியில் பதிவானது.
இணையவாசிகள் அந்தப் பதிவை 5 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுள்ளனர்.
சூரிய உதயத்திற்கு முன் பறித்தால் மட்டுமே பழத்தின் பதம் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் அவரிடம் கூறியதாகத் தெரியவந்தது.
தமது மகன் செங் (Cheng) பிளம் பழத்தை விரும்பி சாப்பிடுவதால் 2 மணி நேரத்தில் மொத்தம் 15 கிலோ எடையுள்ள பழங்களை அவர் பறித்தார்.
1,300 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் தமது மகனுக்கு அந்தப் பழங்களை அனுப்பி வைத்தார்.
முதியவரின் அலாதி அன்பைக் கண்டு செங்கும் இணைவாசிகளும் நெகிழ்ந்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments