
"ஏன் என்னைத் தடுப்பது மருத்துவரே. இரு ஆண்டு காலம் எனது தாயார் எத்தனை வலியோடு வாழ்ந்து கொண்டு இருப்பார் அவரது கவலைக்கு முற்றுப்புள்ளி இட்டு வேதனையை விரைந்து துரத்த வேண்டாமா? .என்னைத் தடுக்காதீர்கள். வாருங்கள் தோழியரே நம் மெய்க் காவலர்களிடம் ஆணையிடுங்கள். அன்னையின் அந்தப்புரம் செல்லத் தயாராக நான் இருப்பதை" என்றார் ராஜகுமாரி.
மீனா பானு என்ன செய்வது தன் இளைய இளவரசியின் கட்டளையை மீற முடியாமல் தவித்தனர்.
அப்போது மருத்துவர் குமரன் "சரி அரசே போகலாம். நீங்க அதற்கு முன் என் கடமையைச் செய்திட அனுமதியுங்கள்." என்று கூறினான்.
"என்ன கடமை சொல்லுங்க மருத்துவரே"
"பெரிதாய் ஒன்றும் இல்லை இளவரசியரே. நான் உங்கள் உடல் நிலை நன்றாக உள்ளதை அறிந்து விட்டேன். உங்கள் பேச்சில் இருந்து அதில் சந்தேகம் இல்லை. ஆனால்" என்று அவன் இழுத்துக் கொள்ளவே
"ஆனால் என்றால் என்ன? ஏன் தயக்கம் கூறுங்கள்" என்றாள் இளவரசி.
"ஒரு தடவை பருக வேண்டிய மருந்து இருக்கின்றது .அதை நீங்க கண்டிப்பாகப் பருகியே ஆக வேண்டும் காரணம் முற்றாக முடித்தால் தான் நரம்பு சம்மந்தமான பிரச்னை எழாது இருக்கும் அரசே தயவு செய்து மறுக்காமல் அருந்துங்கள்"என்றான்.
சிறுது நேரம் மௌனம் காத்த ராஜகுமாரி "நான் நன்றாகவே உள்ளேன் ஆகையால் முழுமையாக உடலும் ஆரோக்கியம் அளிப்பதாகவே தோணுதே மருத்துவரே. சரி இருந்தும் உங்கள் பணிக்குக் குறுக்கே நான் இருந்து மறுக்க விரும்பவில்லை. தாருங்கள் மருந்தை அருந்தி விட்டுப் புறப்படுகின்றேன்" என்றார்.
"நல்லது அரசே. இதோ கொண்டு வருகின்றேன்" என்று கூறி விரைந்தான் குமரன். மருந்தை எடுத்து வரவே போன வேகத்திலே சில மாத்திரைகளையும் மருந்தையும் கொண்டு வந்து சூடான நீரோடு கொடுக்குமாறு மீனாவிடம் நீட்டினான்.
அதை அவளும் வாங்கி அப்படியே செய்தாள். "இப்போது உங்களுக்கு திருப்தி தானே மருத்துவரே. நாம் போவோமா? மகாராணியிடம்" எனக் கேட்டாள் ராஜகுமாரி.
"ஆம் போகலாம் அரசே காவலர்கள் வரட்டும் பல்லக்கோடு" என்றான் குமரன்.
"சரி" எனக் காத்திருந்த போது ராஜகுமாரி மெது மெதுவாகக் கண் உறங்கிக் கொண்டு இருந்தார். பானு கேட்டாள் "என்னாச்சு மருத்துவரே ஏன் ராஜகுமாரி திடீரென உறங்கியது என்ன மருந்து கொடுத்தீர்கள்" என்று.
அப்போது மருத்துவர் கூறினார் "தூக்க மருந்து அவர் தூங்கி எழும் அந்த இடைவேளையிலே நாம் மகாராணியிடம் உண்மையைக் கூறி சபையைக் கூட்டி ராஜகுமாரியை மேளதாளத்தோடு அழைத்துப் போவோம் அதனால் தான் உறங்கச் செய்தேன்" என்றான்.
"ஓகோ புரிந்தது. மருத்துவரே நீங்க புறப்படுங்கள் நான்கள் ராஜகுமாரி அருகே அமர்ந்து கொள்கின்றோம்" எனக் கூறி மருத்துவர் குமரனை அனுப்பி வைத்தார்கள்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments