
மலேசியாவில் கம்பிவண்டிப் பயணம் செய்ய விரும்பிய தம்பதி ஏமாந்துபோன சம்பவம் இணையத்தில் வெகுவாகப் பேசப்படுகிறது.
தம்பதி 300 கிலோமீட்டர் பயணம் செய்து கம்பி வண்டிச் சேவை எடுக்கும் தலத்தைச் சென்றடைந்தனர்.
ஆனால் அங்கே அப்படி ஒரு சேவையே இல்லை!
பேராக், கெடா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் கம்பிவண்டிச் சேவை இருப்பதாக ஒரு காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப் பொய்யான காணொளி TikTok, Facebook ஆகிய சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வந்ததாக Malay Mail செய்தி சுட்டியது.
அதை நம்பி அந்த இடத்திற்குச் சென்ற தம்பதியிடம் அது செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட காணொளி என்று ஹோட்டலில் பணியாற்றிய பெண் ஒருவர் தெரிவித்தார்.
அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இணையத்தில் காண்பதை நம்பி ஏமாற வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே அவற்றைப் பகிர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
"இருப்பினும் என்றாவது ஒரு நாள் அத்தகைய கம்பிவண்டிச் சேவை தொடங்கலாம்", என்று சிலர் வேடிக்கையாகப் பதிவிட்டனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments