
தாய்லாந்து இடைக்காலப் பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் பும்தாம் வெச்சாயாச்சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இடைக்காலப் பிரதமர் பும்தாம் வெச்சாயாச்சாய்-இன் கீழ் செயல்படவுள்ள புதிய அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை தாய்லாந்து மன்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பேதோங்டார்ன் ஷினாவத்ராவிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வருவதால் பேதோங்டார்ன் ஷினாவத்ராவைப் பிரதமர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணை பல மாதங்கள் நீடிக்கலாம் என்றும் தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில், தாய்லாந்து இடைக்காலப் பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் 71 வயதான பும்தாம் வெச்சாயாச்சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஜூன் 15-ஆம் தேதி கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிவானதிலிருந்து பேதொங்தார்ன் பலத்த எதிர்ப்பை எதிர்நோக்கினார்.
அதன் பின் தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இன்று தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கியது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments