
இந்தோனேசியா பாணியில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தோனேசிய பொருள்களுக்கு 19 சதவீத வரி விதிக்கப்படும்.
அதேவேளையில், இந்தோனேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்களுக்கு எந்த வரியையும் இந்தோனேசியா விதிக்காது.
இதேபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள இந்தியா முன் வர வேண்டும்.
இதுவரை இந்த நாடுகளின் சந்தைகளில் அமெரிக்கா முழுமையாக நுழைந்ததில்லை. வரி விதிப்பு நடவடிக்கைகளால் தற்போது அது சாத்தியமாகியுள்ளது என்றார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments