Ticker

6/recent/ticker-posts

Ad Code



ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா மீது NATO அழுத்தம் - வெளிவிவகாரத்துறை பதிலடி


உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உக்ரைன்-ரஷ்யா போர் தொடரும் நிலையில், NATO நாடுகள் தற்போது இந்தியா மீது அழுத்தம் செலுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் NATO கூட்டணி நாடுகள், ரஷ்யாவை ஆதரிப்பதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை குற்றம் சாட்டி வருகின்றன.

அமெரிக்கா ரஷ்யா எண்ணெய் இறக்குமதிக்கு 500% வரி விதிக்கக் கூடும் என மசோதா முன்வைத்துள்ளது.

இதற்கிடையே, NATO தலைமைச் செயலாளர் மார்க் ருட்டே, ரஷ்யா 50 நாட்களுக்குள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% "secondary tariff" விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு இந்திய வெளிவிவகாரத் துறை கடுமையாக பதிலளித்துள்ளது.

“எதிர்பார்ப்புகள் மற்றும் உலக சூழ்நிலைகளைப் பொருத்து, நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே மிக முக்கியம்” என விளக்கம் அளித்துள்ளது. இதில் “இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை” என்றும் எச்சரித்துள்ளது. 

இதற்கு முன், இந்தியா ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியபோதும், அமெரிக்காவின் CAATSA (Countering America’s Adversaries Through Sanctions Act) விதித்த தடைகளுக்கு மத்தியிலும் தனது முடிவில் உறுதியாக இருந்தது.

அதேபோல், தற்போது ரஷ்யா எண்ணெய் கொள்முதல் விவகாரத்திலும், இந்தியா தேசிய நலனில் தான் முடிவெடுக்கும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், துருக்கி போன்ற NATO உறுப்பினர் நாடுகளும் ரஷ்ய எண்ணெய் வாங்கும் போது, இந்தியாவை மட்டும் குற்றம்சாட்டுவது நீதிகேடானது என விமர்சனங்கள் எழுகின்றன.

lankasri

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments