
நெஞ்சுக்குள் குழியிட்டு
நீராகக் குருதியிட்டு
பொத்திப் பொத்தி
வளர்த்து வந்தேன்
ஆசையொன்று.
பூவாட்டம் வாசமில்லை
தேராட்டம் அழகுமில்லை .
ஆனாலும் தேவையானதே
அந்த ஆசை
சின்னப் பொண்ணு எனக்கு.
காதலென்று பேரிட்டு
கண்மணியாள் உள்ளத்திலே
வேர் விட்ட ஆசையது.
தேசமெல்லாம் பேர் போனது
தேவையானதே இவளுக்கும்.
ஊரும் உறவும் பார்த்திடாமல்
நரம்போடு எலும்பாலும்
வேலியிட்டு வளர்த்து வந்தேன் .
ஊருக்கும் தெரியவில்லை
உற்றவனும் அறியவில்லை
ஊமைக் காதலதை.
வளராமல் வாடுதே
முளையிலே கருகுதே
காதல் செடி கானல்நீர்
இட்டால் காணாமல்
போயிடுமோ
கலங்குகிறேன் நானே.
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments