
ஈரோட்டில் சக வகுப்பு மாணவிகளிடம் பேசக்கூடாது என்பதற்காக தனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக, உயிரிழந்த +2 மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்த சிவா என்பவரின் மகன் ஆதித்யா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு அருகே உள்ள வீதியில் உயிரிழந்து கிடந்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆதித்யாவை அடித்து கொன்றது தெரியவந்தது. மேலும், வகுப்பில் படிக்கும் சக மாணவிகளிடம் பேசக்கூடாது என்று குறிப்பிட்ட மாணவர்கள் தொடர்ந்து தனது மகனிடம் தகராறு செய்து வந்ததாக அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், கொலை குற்றம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவலர்கள், 2 மாணவர்களை கைது செய்தனர். கைதான 2 மாணவர்களும் ஈரோடு இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவலர்கள், ஆதித்யாவை தாக்கிய மற்ற மாணவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments