
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கல்லீரல் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் புதிய செயல்முறையைச் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
‘டைம்ஸ் ஸ்கோர்’ என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறை கல்லீரல் கட்டிகளில் நோயெதிர்ப்பு ஆற்றல் கொண்ட உயிரணுக்கள் காணப்படும் இடம் குறித்த தகவல்களை ஆய்வு செய்கிறது.
ஏ*ஸ்டார்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு அமைப்பின் மூலக்கூறு, உயிரணு உயிரியல் கழகமான ‘ஐஎம்சிபி’, சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை உருவாக்கினர்.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 100,000 பேரில் 20க்கு மேற்பட்டோர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கு ஆண்களிடையே வழக்கமாகக் கண்டறியப்படும் நான்காவது புற்றுநோயாகவும் மரணம் ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது புற்றுநோயாகவும் இது விளங்குகிறது.
புற்றுநோய் உயிரணுக்கள் போன்ற பாதிக்கப்பட்ட உயிரணுக்களை இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட உயிரணுக்கள் அழிக்கின்றன.
இத்தகைய உயிரணுக்களின் எண்ணிக்கை ஒருவரது உடலில் குறைவாக இருந்தால் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம்.
நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட உயிரணுக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடாமல், அவை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களிலிருந்து எவ்வளவு அருகில் அல்லது தொலைவில் அமைந்துள்ளன என்பதை ஆய்வு செய்கிறோம் என்றார் டாக்டர் ஜோ இயோங்.
இவர் இந்த ஆய்வில் பங்கேற்ற இரு அமைப்புகளிலும் முதன்மை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments