Ticker

6/recent/ticker-posts

Ad Code



பிறந்தநாள் ஆடை பொருந்தவேண்டும் - ஆபத்தான முடிவை எடுத்த இளம்பெண்


சீனாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியதால் மரணத்தின் விளிம்பு வரை சென்றுள்ளார்.

மெய் (Mei) என்ற அவர் தாம் வாங்கிய பிறந்தநாள் ஆடை பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார்.

அவருக்கு வயது 16.

அவர் இரண்டு வாரங்களுக்குச் சிறிதளவு காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டார். பேதி மருந்தையும் உட்கொண்டார்.

அதனால் அவரது கால்கள் வலுவிழந்தன; மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் பொட்டாசியம் (potassium) பற்றாக்குறை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

பிறகு 12 மணிநேரத்திற்கு அவசர சிகிச்சை நடந்தது.

அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சீனாவில் இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வருவதுண்டு.

மக்கள் அவை குறித்துத் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments