Ticker

6/recent/ticker-posts

Ad Code



உங்கள் குழந்தை தூக்கத்திலும் பேசுகிறதா..? நிபுணர் தரும் விளக்கம்..!


பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எப்போதாவது தூக்கத்தில் பேசுவதை கவனித்திருப்பார்கள். அவர்கள் தூக்கத்தில் யாருடனோ அரட்டை அடிப்பது போல் பேசுவார்கள். சில நேரங்களில் குழந்தைகள் தூக்கத்தில் அலறி, பீதி அடைவார்கள். உங்கள் குழந்தைகள் திடீரென்று நள்ளிரவில் இதைச் செய்தால், இந்தப் பழக்கம் நிச்சயமாக உங்களைத் தொந்தரவு செய்யும். ஏனென்றால், இந்தப் பழக்கம் குழந்தைகளுக்கு இயல்பானதா அல்லது இது ஏதாவது நோயின் அறிகுறியா என்று பலர் சந்தேகிக்கிறார்கள். குழந்தைகள் தூக்கத்தில் பேசுவது இயல்பு தான், இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல.

இது குறித்து சாகேத்தில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர் சமீர் மல்ஹோத்ரா, கூறியதாவது, குழந்தைகள் தூக்கத்தில் பேசுவது பொதுவானது மற்றும் இயல்பானது என்று கூறியுள்ளார்.

குழந்தைகள் தூக்கத்தில் ஏன் பேசுகிறார்கள்?

மன அழுத்தம் மற்றும் பதட்டம்:  

பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதாவது பள்ளியில் ஏற்படும் அழுத்தங்கள், குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள் போன்ற கவலைகள் காரணமாக தூக்கத்தில் பேசலாம். இதுதவிர உற்சாகத்தின் காரணமாகவும் குழந்தைகள் தூக்கத்தில் பேசலாம். சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் விடுமுறைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியாகிவிடுவார்கள், அதனால்தான் அவர்கள் தூக்கத்தில் பேசுகிறார்கள்.

காய்ச்சல்: 

சில நேரங்களில் குழந்தைகள் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக தூக்கத்தில் பேசுவார்கள். அதாவது சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும்போது தூக்கத்தில் பேச தொடங்குவார்கள்.

தூக்கமின்மை: 

பல குழந்தைகளுக்கு ஒரு நிலையான வழக்கமோ அல்லது நேர அட்டவணையோ இல்லை. குறிப்பாக இரவில் அவர்கள் தூங்கும் நேரமும் நிர்ணயிக்கப்படுவதில்லை, இதன் காரணமாக அவர்கள் தூக்கத்தில் பேச தொடங்குவார்கள்..

மரபியல்: 

சில குழந்தைகளுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் மரபணு ரீதியாக இருக்கும். அந்த குழந்தையின் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் இருக்கும், இதன் காரணமாக அந்த பழக்கம் குழந்தைகளுக்கும் இருக்கிறது.

குழந்தைகள் தூக்கத்தில் பேசுவது பற்றி பெற்றோர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று டாக்டர் மல்ஹோத்ரா கூறியுள்ளார். இருப்பினும், தூக்கத்தில் பேசுவது அடிக்கடி நிகழும்போது, அல்லது அவை சத்தமாக, இடையூறாக இருக்கும் போது அல்லது கனவுகளால் மோசமடையும் போது அல்லது தூக்கத்தில் நடப்பது ஆகியவை அதிகரிக்கும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பின்னர், மருத்துவரை தொடர்புகொள்வதும், தேவைப்பட்டால் மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் முக்கியம் என்று டாக்டர் மல்ஹோத்ரா அறிவுறுத்துகிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

"முன்னெச்சரிக்கைகள் எப்போதும் சிகிச்சையை விட சிறந்தது" என்று பெரியோர்கள் கூறுவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் தூக்கத்தின் தரத்தை பராமரிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தூக்க சுழற்சியை பராமரிக்கவும்:

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நல்ல தூக்கப் பழக்கத்தைப் பழக்கப்படுத்த வேண்டும். பல நேரங்களில் குழந்தைக்கு நேர அட்டவணை இருக்காது, இதனால் அவர்கள் தூங்குவதற்கு சரியான நேரம் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், முதலில் குழந்தையின் தூக்க சுழற்சியை பராமரிக்கவும். எனவே உங்கள் குழந்தையின் படுக்கையறை அமைதியாகவும், தூங்குவதற்கு வசதியாகவும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். முக்கியமாக படுக்கையறையின் வெப்பநிலை உங்கள் குழந்தையின் அமைதியான தூக்கத்திற்கு ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

படுக்கைக்கு செல்லும் நேரத்தை வழக்கமாக்கி கொள்ளுங்கள்:

உங்கள் குடும்பத்தில் தினமும் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையையும் அதே நேரத்தில் தூங்கும் பழக்கத்தை பின்பற்ற உதவும். அவர்கள் குறைந்தது எட்டு முதல் ஒன்பது மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தூங்கும் நேர வழக்கமானது உங்கள் குழந்தையின் தூக்கம், குடும்ப பிணைப்பு மற்றும் வளர்ச்சிக்கு நன்மை அளிக்கும். முக்கியமாக குழந்தைகள் தூங்குவதற்கு முன் கழிப்பறையைப் பயன்படுத்துவதையும் அவர்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் தூக்கத்தை மேம்படுத்தவும்:

உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்களின் தூக்கம் மிகவும் முக்கியமானது, மேலும் பெற்றோர்களாகிய நீங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தூங்கும் நேரத்தில், அவர்களுடன் எந்தவிதமான வாக்குவாதங்களை செய்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் அது குழந்தையைப் பாதிக்கும் மற்றும் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மேலும், பல நேரங்களில் நாம் குழந்தைகளுக்கு இரவில் டீ அல்லது சர்க்கரைப் பொருட்களைக் கொடுக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகளின் ஆற்றல் அளவு அதிகரிக்கக்கூடும், இதன் காரணமாக குழந்தை இரவில் தூக்கத்தில் பேச தொடங்குவார்கள். எனவே குழந்தைகளுக்கு இரவில் காஃபின் போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments