Ticker

6/recent/ticker-posts

Ad Code



பொலிஸ் சீருடையில் வரும் கொள்ளையர்கள்


போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொள்ளையர்கள் குறித்த வீட்டிற்கு சென்று, அங்கு சோதனையிடுவதாக கூறி வீட்டினுள் நுழைவது அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகியிருந்தது. 

இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த சந்தேகநபர்கள் வந்த வேனை சுற்றி வளைத்த நிலை​யில், கொள்ளையர்கள் சிசிரிவி பதிவு சாதனம் என்று நினைத்து மற்றொரு சாதனத்துடன் தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக கல்னேவ பொலிசார் நடத்திய விசாரணையில், சந்தேக நபர்கள் வந்த வேனுடன் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

adaderanatamil


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments