தினமும் அதிகாலை எழுவது என்பது சிறிது சிரமமான விஷயம்தான்…
அது ஒரு ஒழுக்கம்…
அதிகாலை தூக்கம் ஒரு சொர்க்கம்…
அனுதினமும் அதிகாலை எழுவது என்பது. ஒரு தவம்..
பல ஆண்டுகளாக தினமும் அதிகாலை எழுபவர்கள் ஒழுக்க மிக்கவர்கள் என்பது என்னுடைய கருத்து அவர்களால் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்….
அதிகாலை எழுபவர்கள் எந்த காரியத்தையும் திட்டமிட்டு கட்டுப்பாட்டுடன் செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்…
தினமும் அதிகாலை எழுவது என்பது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அதிகம் கிடைக்க வழிசெய்கிறது
அந்த ஒரு மணி நேரத்தை பயன்படுத்தினால் ஒரு ஆண்டுக்கு 365 மணி நேரம் productive hours என்று கூறலாம்…
காலையில் சீக்கிரம் எழுவது என்பது இரவில் சீக்கிரம் உறங்க போவதையும் குறிக்கிறது…
பின்னிரவு நேரத்தில் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது…எதிர்மறை எண்ணங்கள் அதிகம் குடிகொண்டிருக்கும்..
காலை ஒரு மணி நேரம் என்பது ஆக்கபூர்வமான எண்ணங்களை கொண்டது…
ஆகவே ஒரு மூன்று மாதம் அதிகாலை எழுந்து முயற்சி செய்து பாருங்கள் உங்கள் வாழ்வு எப்படி மாறுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் அதன் பின்பு அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடியுங்கள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments