Ticker

6/recent/ticker-posts

Ad Code



Ind vs Eng | பும்ரா, பந்த் வெளியே.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்


பும்ரா, பந்த் காயம் காரணமாக மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட மாட்டார்கள். ஹர்ஸ்தீப் சிங், துருவ் ஜோரல், சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு வெற்றி அவசியம்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் ஜூலை 23 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மான்செஸ்டர் டெஸ் போட்டியில் வெற்றி பெற இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் நடைபெற உள்ளது. பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாட முடியும் என்பதால் மான்செஸ்டர் போட்டியில் அவருக்கு ஒய்வு வழங்கப்பட உள்ளது. பிரசித் கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே வழங்கப்பட் வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் இருந்ததால் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ்தீப் சிங் அணியில் இடம் பெற உள்ளார்.

துணை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக 4 ஆவது டெஸ்டில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக துருவ் ஜோரல் அணியில் இணைகிறார். லார்ட்ஸ் டெஸ்டில் துருவ் ஜோரலில் விக்கெட் கீப்பிங் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பைஸ் மூலமாக 25 ரன்களை அவர் 4 ஆவது இன்னிங்சில் கொடுத்தார். இந்த ரன்கள் கட்டுப்படுத்தி இருந்தாலே இந்திய அணி வெற்றி பெற்றிக்கு என்ற பேச்சு எழுந்தது. ஆனால் ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட துருவ் ஜோரல் தான் விக்கெட் கீப்பிங்கில் இருக்கும் ஒரே வாய்ப்பு.

கடந்த 3 டெஸ்டிகளில் வாய்ப்பு கொடுத்து அதில் ஒன்றில் கூட சரிவர பயன்படுத்தாமல் திணறும் கருண் நாயருக்கு பதிலாக மீண்டும் சாய் சுதர்சன் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 இன்னிங்சிலும் கருண் நாயர் ஒரு அரைசதம் கூட விளாசவில்லை.

மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை இழக்கும் சூழல் உள்ளது. இதனால் மான்செஸ்டர் போட்டியில் வெற்றி பெற இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். லார்ட்ஸ் டெஸ்டில் சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஃபார்முக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகறிது.

இந்திய உத்தேச அணி : யாஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, துருவ் ஜோரல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ்

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments