Ticker

6/recent/ticker-posts

Ad Code



"காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடூரம்": UNRWA எச்சரிக்கை


காசாவில் இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலால் தினமும் அப்பாவி மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

குண்டுகளும் துப்பாக்கிகளும் காசா மக்களின் ஈமானை பலவீனம் அடையச் செய்திட முடியாது என்பதால் தற்போது பட்டினி போட்டுக் கொள்ளும் கொடூரச் செயலை இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவம் செய்கின்றது.

 உதவி  விநியோக நிலையங்களிலும் உணவு தேடிச் செல்லும் அப்பாவி மக்களையும்  சுட்டுக் கொலை செய்கின்றார்கள்.
தினமும் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.

காசா பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது.காசாவின் 2.3 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் (UNRWA), காசாவிற்குள் இருந்து - அதன் சொந்த ஊழியர்களிடமிருந்தும் - "பட்டினியின் கொடூரமான  செய்திகளை" பெறுவதாக வெளிப்படுத்தி, எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உணவு விலைகள் 40 மடங்கு அதிகரித்துள்ளன. இதற்கிடையில், காசாவிற்கு வெளியே, கிடங்குகளில்  குவிந்துள்ள உணவுகள். மூன்று மாதங்களுக்கும் மேலாக முழு மக்களுக்கும் போதுமானது. என்னினும் இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக அவை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

 "காசாவில் உள்ள துன்பங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டது, அவை நிறுத்தப்பட வேண்டும். முற்றுகையை நீக்கி, உதவிகளைப் பாதுகாப்பாகவும் அளவிலும் அனுமதிக்கவும்."என்று UNRWA அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான "இனப்படுகொலையை" நிறுத்த உடனடி சர்வதேச நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்.

ஆயினும்கூட, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகளின் ஆதரவுடன் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பும் மற்றும் பட்டினி கொள்கையும்  மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

மாஸ்டர் 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments