
வாட்ஸ்ஆப் தகவல்களை தினசரி அல்லது வாரம்தோறும் அல்லது மாதம்தோறும் பேக்அப் Back Up செய்து வைத்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்ட மெசேஜை உங்களுக்கு அனுப்பியவர்கள் அழித்து விட்டால் அதனை எப்படி திரும்ப பார்க்கலாம் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
வாட்ஸ் ஆப்பில் சிலர் நமக்கு மெசேஜை அனுப்பி விட்டு அதனை மீண்டும் திரும்ப அழித்துவிடுவார்கள். அவர்கள் என்ன அனுப்பினார்கள் என்கிற ஆர்வம் நமக்கு ஏற்படும்.
இருப்பினும் அதனை நம்மால் பார்க்க முடியாது. இப்படி ஒரு அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
இவ்வாறு வாட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட தகவல்களைப் பார்ப்பதற்கு மூன்றாம் தரப்புச் 3rd Party Apps செயலிகள் நமக்கு உதவுகின்றன. இதற்கான செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்.
இதன் மூலம் நீக்கப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை நம்மால் பார்க்க முடியும். இருப்பினும் அதிக ரேட்டிங் கொண்ட செயலி எது?, மேலும் எந்த செயலிக்கு யூசர்கள் நல்ல கமென்ட் செய்துள்ளார்கள் என்பதையெல்லாம் தேடிப் பார்த்து அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தச் செயலி உங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து செய்திகளையும் படித்துவிட்டு அதனைச் சேமித்து வைத்துக்கொள்ளும். இதனால் வாட்ஸ்அப்பில் தகவல்கள் நீக்கப்பட்டாலும் கூட அந்தச் செயலில் தகவல் பாதுகாப்பாக இருக்கும்.
தானியல்பாகச் சேமிக்கும். அதாவது Auto Save முறையில் இந்தச் செயலிகள் செயல்பட்டு நமக்கு வரும் தகவல்களைச் சேமித்து வைக்கின்றன.
இதனை தினசரி அல்லது வாரம்தோறும் அல்லது மாதம்தோறும் பேக்அப் Back Up செய்து வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும் இந்த வாட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கும் செயலிகள் ஆண்ட்ராய்டு 11 மற்றும் அதற்கு அடுத்ததாக வந்த வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments