
நிலையாமை
குறள் மொழி-1
1. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
குறள் மொழியின் பொருள் :
குறள் எண் : 331
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
நபி மொழி :
“பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும்" எதுவும்
நிரந்தரம் இல்லை.
இறை வசனம் : திருக் குர்ஆன் - 55: 26
நிலையாமை
குறள் மொழி -2
2.கோடியும் அல்ல பல.
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
குறள் மொழியின் பொருள் :
குறள் எண் : 337
அடுத்த நிமிடம் நாம் வாழ்வோமா? என்பதையே அறியாதவர்கள் எண்ணுகின்ற எண்ணங்களோ பல கோடிகள்.
நபி மொழி :
"மரணம் வந்துவிட்டால் அதைத் தடுக்கவோ, தாமதிக்கவோ, அல்லது அதைவிட்டு ஓடவோ முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்; ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வாழவும், அழியவும் ஒரு காலமுண்டு. அவர்களுடைய காலம் வரும்பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
இறைவசனம் : திருக் குர்ஆன் 7: 34
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments