Ticker

6/recent/ticker-posts

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. லிஸ்ட்டில் தற்போது உள்ளவர்கள் யார்?


உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நன்கு அறியப்பட்ட 94 வயதான கோடீஸ்வரர் வாரன் பஃபெட் இந்த பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். பணக்காரர்கள் பட்டியலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த முறை வாரன் பஃபெட் தொடர்பான மாற்றம் நிகழ்ந்துள்ளது. 94 வயதான வாரன் பஃபெட், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர் நீண்ட காலமாக உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.

தற்போது அவருக்கு பின்னடைவு ஏற்பட்டு, அவர் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, வாரன் பஃபெட் தற்போது உலகின் 11வது பணக்காரராக உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலர்களாக உள்ளது.

காரணம் என்ன?
கடந்த ஒரு மாத காலமாக அவரது நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால், அவரது நிகர சொத்து மதிப்பிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மைக்கேல் டெல்

டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் CEO மைக்கேல் டெல் தற்போது உலகின் 10வது பணக்காரராக உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பில் 1.41 பில்லியன் டாலர் உயர்வு ஏற்பட்டு, அவர் வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார். மைக்கேல் டெல்லின் நிகர சொத்து மதிப்பு 141 பில்லியன் டாலர்களாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய பணக்காரர்களில் இவரும் ஒருவர்.

வாரன் பஃபெட்டைத் தவிர, மற்றொரு பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் சமீபத்தில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியிருந்தார்.

அவரது சொத்து மதிப்பு கடந்த சில காலமாக குறைந்து வருவதால், அவரது தரவரிசையில் தாக்கம் ஏற்பட்டது. தற்போது பில் கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 123 பில்லியன் டாலர்களாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை அவர் 35.7 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி டாப் 10 பணக்காரர்கள் பின்வருமாறு-
எலான் மஸ்க் - 371 பில்லியன் டாலர்கள் (உலகின் முதல் பணக்காரர்)
லாரி எலிசன் - 302 பில்லியன் டாலர்கள்
மார்க் ஜுக்கர்பர்க் - 270 பில்லியன் டாலர்கள்
ஜெஃப் பெசோஸ் - 244 பில்லியன் டாலர்கள்
லாரி பேஜ் - 180 பில்லியன் டாலர்கள்
ஸ்டீவ் பால்மர் - 179 பில்லியன் டாலர்கள்
செர்ஜி பிரின் - 168 பில்லியன் டாலர்கள்
ஜென்சன் ஹுவாங் (NVIDIA) - 159 பில்லியன் டாலர்கள்
பெர்னார்ட் ஆர்னால்ட் - 153 பில்லியன் டாலர்கள்

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments