Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியாவுக்கு 25% வரிவிதிப்பு: பாகிஸ்தானுக்கான வரியை 10% குறைத்து ட்ரம்ப் உத்தரவு


உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கான 25 சதவீத வரி விதிப்பு மாற்றமின்றி நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கான வரியை 10 சதவீதம் குறைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அப்போது, ‘‘அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதில் வரி விதிக்கும்’’ என்று அறிவித்தார். இந்தியாவுக்கு முதலில் 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
பிறகு, அமெரிக்காவின் விடுதலை நாளை முன்னிட்டு அந்த வரி 1 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வரி விதிப்பை தவிர்க்கும் வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள ஜூலை 9-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. பின்னர், இந்த அவகாசம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 69 நாடுகள், ஐரோப்பிய யூனியனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கடந்த 31-ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளார். 

இதில், சிரியாவுக்கு அதிகபட்சமாக 41 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 14 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு இது அதிக வரி விதிப்பாகும்.

அடுத்ததாக, லாவோஸ், மியான்மருக்கு 40 சதவீதம், சுவிட்சர்லாந்துக்கு 39 சதவீதம், இராக், செர்பியாவுக்கு 35 சதவீதவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments