1990ம் ஆண்டுகளில் கல்ஹின்னை நயீம் என்பவரிடத்தில் தோன்றிய, சர்வதேச ரீதியான சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்ற எண்ணக்கரு, குவைத்திலிருந்து, "வெளிநாடு" என்ற பெயரில் சஞ்சிகை அச்சிடுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஈராக் தேசம், குவைத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால் கைவிடப்பட்டது!
இருந்தபோதிலும், தன் எண்ணத்தைக் கைவிடாமல், "வேட்டை" என்ற பெயரில் இணையவழிச் சஞ்சிகை ஒன்றை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, ஒரு தசாப்தம் வரையும் நிலைத்து நிற்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
சர்வதேச ரீதியான சிறந்த பல எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பதிவிட்டுவரும் இச்சஞ்சிகை, கல்ஹின்னை என்ற கிராமத்தைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்றமையானது, கல்ஹின்னையின் முதுபெரும் கவிஞர்களான காலஞ்சென்ற எம். ஸீ. எம். ஸுபைர், எஸ். எம். ஹலீம்தீன், எச். ஸலாஹுத்தீன், கதாசிரியர் மாமா ஹனீபா, எழுத்தாளரும், நூல் வெளியீட்டாளருமான எஸ்.எம். ஹனீபா ஆகியோர் கிராமத்தில் வளர்த்துச் சென்ற இலக்கியத் தடத்தை,"வேட்டை" என்ற மின் இணையவழிச் சஞ்சிகை இடைவிடாமல் தொடர்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!
உலகம் முழுவதிலுமுள்ள சுமார் ஏழு இலட்சம் தமிழ்பேசும் வாசகர்களை வாரியணைத்துக் கொண்டு, சிங்களம் பேசும் வாசகர்களுக்காக Sithijaya என்ற இதழையும், ஆங்கிலம் பேசும் வாசகர்களுக்காக GALHINNAToday என்ற இதழையும் இணையத்தில் பதிவிட்டு வருவது பிரமிக்கத்தக்க ஒரு விடயமாகும்!
சஞ்சிகை ஆரம்பிக்கப் பட்டதிலிருந்தே சர்வதேச எழுத்தாளர்களுக்கு இணையாக, கல்ஹின்னையிலிருந்து கே. அமானுல்லா, பஹ்மி ஹலீம்தீன், எம். எச். எம். நியாஸ்,எஸ்.எம். இம்தியாஸ், டாக்டர் எம்.எச்.எம்.நஸீம் ஆகியோர் ஆக்கங்களை இடம் பெறச் செய்து கொண்டிருப்பது மகிழ்வுதரும் விடயமாகும்.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, இலங்கையில் முதன் முதலாக செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்திய பெருமையைத் தன்வசம் கொண்டுள்ள "வேட்டை" இணைய சஞ்சிகையானது, ரியாஸ் முஹம்மத், பஹ்மி ஹலீம்தீன், மதுரை பாபாராஜ், கலா, மேமன்கவி என்போரின் கவிதைகளையும், பாடல்களையும் சலனப் படங்களாக்கி, வீடியோ வடிவில் பதிவிட்டு வருவது, இலக்கியத்தை AI மூலம் நவீனத்துக்குள் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பு என்றுதான் கூற வேண்டும்!
பத்தாவதுவது வருடத்தில் கால் பதிக்கும் "வேட்டை"யிடமிருந்து எதிர்காலத்தில் சிறந்த பல ஆக்கங்களை வாசகர்களும், நேயர்களும் எதிர்பார்க்கலாம்!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments