Ticker

6/recent/ticker-posts

பத்தாண்டு சேவையில் வேட்டை இதழுக்கு வாழ்த்து !மதுரை பாபாராஜ்(27/8/25)


வேட்டை இதழின் அருமையான தொண்டுகளின்
வீச்சுக்குப் பத்தாண்டு என்றே மகிழ்கின்றோம்!
ஆற்றல் நிறைந்த எழுத்தாளர் தொட்டேதான்
ஊற்றெடுக்கும் நல்ல  படைப்புகளைத் தந்துவக்கும்
வேட்டை தொடரட்டும் தொண்டு.

செயற்கை மனிதனுடன் சேர்ந்தே இயல்பாய்
இயற்கை மனிதனைப் பாடவைக்கும் ஆற்றல்
கலைநுணுக்கத் தோடிங்கே கண்கள் செவிகள்
கலைவிருந்தை வேட்டை இதழ்தந்த விந்தை!
நிலைத்தே பரவட்டும் நீடு.

ஆசிரியர் மற்றும் குழுவினர் தங்களின்
மாசற்ற தொண்டால் தொடரட்டும் வேட்டையின்
ஈடற்ற சேவைக்குப் பல்லாண்டு பாடித்தான்
நாடுகள் போற்றவே வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments