
நான் தமிழ்நாட்டில் வசித்து வந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டை இதழை ஆர்வத்துடன் படித்து வரும் ஒரு ரசிகன்.
வேட்டை இதழ் மூலம் உலகச் செய்திகளை சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம். உடல் நலம் பற்றிய தகவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய படைப்புகள், அதற்குண்டான விளக்கங்கள் என்று பல தரப்பட்ட வாசகர்களையும் கவர்ந்திழுக்கும் மணம் பரப்பும் பூக்கள் இந்த பூங்கொத்தில் நிறையவே இருக்கின்றன.
சிறப்பு வாய்ந்த இந்த இதழ் ஆகஸ்டு 27 அன்று பத்து ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து பதினொன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதே இளமையுடனும், மாறி வரும் புதுமைகளுடனும், வேட்டை இதழ் பீடு நடை போடவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பாளை ப.இசக்கி ராஜன்,
(எழுத்தாளர்) திருவரங்கம்,
திருச்சிராப்பள்ளி.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments