
உக்ரைனின் டோனெட்ஸ்க் (donetsk) பிராந்தியத்தில் மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், உக்ரைனின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள செரேட்னே, கிளிபன் பைக் ஆகிய இரண்டு கிராமங்களை ரஷ்யப் படை கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த ஒருவாரத்தில் உக்ரைனின் ராணுவ தளவாட தொழிற்சாலை உட்பட 143 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறியுள்ள ரஷ்ய ராணுவம், உக்ரைனின் வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments