Ticker

6/recent/ticker-posts

ஆப்கானிஸ்தான் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. 3 பேர் பரிதாப பலி..!


பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதிகளில் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் நங்கர்ஹர் மற்றும் ஹோஸ்ட் மாகாணங்களில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு அல்லது ராணுவம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தான். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments