
மெக்சிகோவில் கொடுத்த கடனைத் திருப்பி தராத பெண்ணின் 5 வயது மகனைக் கடத்திச் சென்று கடன் முதலைக் கும்பல் கொன்றுவிட்டது.
வீட்டு வாடகை கட்டுவதற்காகப் பெண் 3 மாதத்துக்கு முன் சுமார் 1,000 பெசோவைக் (சுமார் 68 வெள்ளி) கும்பலிடம் கடனாய் வாங்கினார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி கும்பலைச் சேர்ந்த மூவர் அந்தப் பெண்ணின் மகனைக் கடத்திச் சென்று அவரை மிரட்டியதாக நம்பப்படுகிறது.
மகனை மீட்கப் பெண் கும்பலிடம் மன்றாடினார். ஆனால் கொடுத்த கடனைத் திருப்பித் தராமல் மகனை விடுவிக்க கும்பல் மறுத்தது.
அதைத் தொடர்ந்து சிறுவனின் உடல் இம்மாதம் 4ஆம் தேதி லா பாஸ் (La Paz) நகரிலுள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவனின் தலையில் கடுமையான காயங்களும், கைகள், கால்கள், மார்பில் வடுவும் இருந்ததாகக் கூறப்பட்டது.
சம்பவத்தின் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாய்க் காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments