Ticker

6/recent/ticker-posts

ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.8.72 லட்சம்... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


வெளியில் சென்றால், சில பேர் தண்ணீர் பாட்டிலை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். சிலர் அருகில் உள்ள கடைகளில் இருந்தும் தண்ணீர் பாட்டிலை வாங்குகிறார்கள். ஆனால், விண்வெளி வீரர்கள் அவ்வாறு செய்ய முடியாது.

பொதுவாக விலை உயர்ந்த பொருளை நாம் கவனமாகக் பார்த்துக் கொள்கிறோம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள விண்வெளி வீரர்களும் அவ்வாறே தண்ணீரை கவனித்துக் கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். ஏன் தண்ணீரை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று. ஏனென்றால், அவர்கள் குடிக்கும் தண்ணீரின் லிட்டரின் விலை ரூ. 8.72 லட்சம் ஆகும். இது விண்வெளி வீரர் தண்ணீர் (Astronaut Water) என்று அழைக்கப்படுகிறது. இது நாம் குடிக்கும் சாதாரண மினரல் வாட்டர் போன்றதுதான். ஆனால், விலை ஏன் இவ்வளவு அதிகம் என்று கேட்டால், அவற்றைப் பூமியிலிருந்து ISS-க்கு ஒரு விண்கலத்தில் கொண்டு செல்ல வேண்டும். ஆகையால், இந்தத் தண்ணீரின் விலை இவ்வளவு அதிகம் என்று கூறப்படுகிறது.

எங்காவது சென்றால், சில பேர் தண்ணீர் பாட்டிலை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். சிலர் அருகில் உள்ள கடைகளில் இருந்தும் தண்ணீர் பாட்டிலை வாங்குகிறார்கள். ஆனால், விண்வெளி வீரர்கள் அவ்வாறு செய்ய முடியாது. அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதற்கு வரம்பு உள்ளது. தண்ணீர் கூட அப்படித்தான். அதை அப்படியே குடிக்க முடியாது. அவர்கள் அதை மிகவும் குறைவாகவே குடிக்கிறார்கள்.

விண்வெளி வீரர்களால் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால் ஒரு ராக்கெட்டில் உள்ள ஒவ்வொரு கிலோகிராம் எடை கூட கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். அதனால்தான் நாசா விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் தண்ணீரை சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட சீல் செய்யப்பட்ட தண்ணீர் பைகளில் அடைக்கிறது. ஒவ்வொரு பையிலும் அரை லிட்டர் தண்ணீர் வரை இருக்கும்.

இதுதவிர, விண்வெளி வீரர்கள் இந்தத் தண்ணீரைக் குடிப்பதில் பெரிய சவாலை எதிர்கொள்கின்றனர். விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், தண்ணீர் குமிழ்கள் போல மிதக்கிறது. இதைத் தடுக்க, விண்வெளி வீரர்கள் சிறிய குழாய் போன்ற ஒன்றில் தண்ணீர் குடிக்கிறார்கள். பேக்கேஜிங் முற்றிலும் காற்று புகாத வகையில் வடிவமைக்கப்படும்.

உண்மை என்னவென்றால், பூமியிலிருந்து ISS-க்கு ஒரு லிட்டர் தண்ணீரை அனுப்ப சுமார் $10,000 செலவாகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.7 லட்சம் ஆகும். சுமார் 3.8 லிட்டர் தண்ணீர் அனுப்புவதற்கு ரூ.72 லட்சம் செலவாகுமாம்.

எரிபொருள், உணவு மற்றும் உபகரணங்களை ராக்கெட் எடுத்துச் செல்ல வேண்டும். இதில் தண்ணீரின் எடை கூட கணக்கிடப்படுகிறது. அதுதான் செலவை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்துகிறது என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், இந்தச் செலவைக் குறைக்க வேண்டும் என்று நாசா யோசித்து வருகிறது.

இதற்குத் தீர்வாகத்தான் நீர் மறுசுழற்சி அமைப்பு பார்க்கப்படுகிறது. பூமியைச் சுற்றி வரும் ISS-ல் உள்ள ஒவ்வொரு சொட்டு நீரையும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், விண்வெளி வீரர்கள் சுவாசிக்கும்போது, உடலில் இருந்து வியர்வை எடுக்கும்போது, தண்ணீரைப் பயன்படுத்தும்போது வெளியேறும் ஈரப்பதம் மட்டுமின்றி, கழிப்பறையிலிருந்து வெளியேறும் திரவமும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதைப் படித்த பிறகு நாம் கொஞ்சம் அதிர்ச்சியடையலாம். ஆனால் இந்த அமைப்பு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசுழற்சி அமைப்பில் வடிகட்டிகள் மற்றும் ரசாயன சிகிச்சைகள் உள்ளன. அவை மாசுபட்ட தண்ணீரில் 98 சதவீதம் வரை சுத்திகரித்து மீண்டும் குடிநீராக மாற்றுகின்றன. ISS-ல் விண்வெளி வீரர்கள் குடிக்கும் தண்ணீர், பூமியில் நாம் குடிக்கும் பாட்டில் தண்ணீரை விட தூய்மையானது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த மறுசுழற்சி மூலம் பூமியிலிருந்து ISS-க்கு அதிக தண்ணீரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இது போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கிறது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments