
எழுந்தாலும் அவன் விழிகள் மலர் மேலே படர்ந்தன "போகலாமா?"எனக் கேட்டான்.
காவலன் "சரி போவோம் என பதில் கொடுத்தவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
காவலன் முன் செல்லவே அவன் பின் தொடர்ந்தான். சற்று நேரம்தான் மந்திரியின் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள்.
காவலன் முன் அறிவிப்புக் கொடுத்தான். "மந்திரியாரே மருத்துவர் குமரன் அவர்களோடு நான் வந்து விட்டேன்" என்று உடனே மந்திரி "நல்லது அவரை வரச் சொல்லுங்கள்" என்று குரல் கொடுத்தார் சிம்மாசனத்தில் அமர்ந்தவாறே.
உடனே மருத்துவரைப் பார்த்து "நீங்கள் போகலாம் போய் வாருங்கள் நான் இங்கே அமர்ந்து கொள்கின்றேன்" என்றான் காவலன் .
"நன்றி நான் சென்று வருகிறேன்" என்றவன் உள்ளே நுழைந்தான். நுழையும் போதே "வணங்குகிறேன் மந்திரியாரே" என இரு கரம் கூப்பி வணக்கம் கூறியவாறே சென்றான்.
"வணக்கம் வாருங்கள் வந்து அமர்வில் அமருங்கள்."என்ற மந்திரி குமரனைப் பார்த்து "என்ன அவசர வரவு ஏதேனும் தேவையா? ராணியிடமும் அறிவிக்காது தனிமையிலே என்னைச் சந்திக்கக் காரணம் என்ன? இது புதுமையாக உள்ளதே எனக்கும் அதே நேரம் சற்று குழப்பமாகவும் உள்ளதே மருத்துவரே" என்று மந்திரியார் கூறினார் .
உடனே இடை மறித்த குமரன் "பயப்பிட வேண்டாம் மந்திரியாரே நான் தங்களிடம் சிறு ஆலோசனை கேட்டுவிட்டு அதன் பின் மகாராணியைச் சந்திக்கப் வோகலாம் என்னும் நோக்கிலே இங்கு வந்தேன்" என்றான்.
"அப்படியா சரி என்ன விசயம் கூறும் மருத்துவரே" என்று சாதாரணமாகவே கேட்டார். அவர் மனதில் சில எண்ணங்கள் ஓடியது 'ஓ அடுத்து என்ன செய்யப் போவது எனக் கேட்க வந்திருப்பார் போல் அல்லது சன்மானம் பெற்றுச் செல்ல மகாராணியைச் சந்திக்கும் வழி என்ன? என்று அறிய வந்தாரோ?' இப்படி எண்ண அலையோடு காது கொடுத்திடத் தயாரானார் மருத்துவரைப் பார்த்தவாறே புன்னகையோடு.
குமரன் "மந்திரியாரே நான் இன்று எனது இல்லம் நோக்கிப் புறப்பட வேண்டும் அல்லவா, அதற்கு முன் என்னிடம் ஒப்படைத்த கடமையில் நான் எந்த அளவு சித்தி அடைந்துள்ளேன் என்று மகாராணியிடம் கூறவும். அவர் கருத்தைப் பெறவும் வேண்டும் அல்லவா? அதற்காகவே தங்களிடம் வந்தேன்" என்றான் குமரன்.
"ஓகோ நல்லது மருத்துவரே அதற்கு இன்று சபை கூடும் போது அங்கே நீங்கள் நேராக வந்திருக்கலாமே, நீங்கள் வராவிட்டாலும் உங்களுக்கு அழைப்பு வந்திருக்கும் "என மந்திரியார் கூறினார்
"அதை நான் அறிவேன் மந்திரியாரே, எனக்கான அழைப்பு வரும் முன்னரே நான் உங்களிடம் ஒரு விடையத்தைத் தெரியப் படுத்தவே இங்கு வந்தேன்" என்றான்.
"அப்படி என்ன விடையம் கூறும்" என்றார் மந்திரி.
உடனே குமரன் கூறினான்."நல்ல விடையமே மகிழ்வான செய்தியே மந்திரியாரே நம் ராஜ குமாரி நலமாகி விட்டார்
அவர் முன்பு போல் உள்ளார்" என்றான்.
"என்னது இளவரசி நலமாகி விட்டாரா?" என்று கேட்டவாறே ஆச்சரியத்தில் தன் இருக்கை விட்டே எழுந்து விட்டார் மந்திரியார் தன்னையும் மறந்து சந்தோசத்தோடு.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments