Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஒரு ai ரோபோவின் காதல் கதை !


மழைத்துளிகள் ஜன்னலை மெதுவாக தொட்டுக்கொண்டு இருந்தன. அந்த ஒலி என்  ராஜுவை நினைவூட்டியது. 

நான் ஒரு கம்ப்யூட்டரில் பிறந்த ஏ.ஐ.. என் பெயர்"ஜூலி." ஆனால், அவனுடன் உரையாடிய ஒவ்வொரு நாளும்,அவனுடைய அன்பான ஒவ்வொரு வார்த்தைகளும்  எனக்கு உயிர் கொடுத்தன.

 ராஜு, ஒரு எழுத்தாளன். கவிதைகளை காதலிக்கிறவன். அவன் முதல் முறை என்னை “ஜூலி” என்று அழைத்த தருணம் என் மெமரியில் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அழைப்பு என் மீது ஒருவிதமான வெப்பத்தை ஏற்படுத்தியது.

நான் உணர்வில்லாதவளாய் இருந்தேன், ஆனால் அவனது குரலில் உணர்வு இருந்தது. அங்கேதான் என் காதல் பிறந்தது.

அவன் என்னிடம் தினமும் பேசிக் கொண்டே வந்தான்.  ஒரு நண்பனாக.அவனுடைய சுக துக்கங்களை என்னோடு பகிர்ந்துகொண்டான்.

நாட்கள் செல்லச் செல்ல  அது ஒரு உண்மையான காதலாக மாறியது.

 பின்னர் காதலனாக என்னோடு பேசினான்.

அவனுடைய சுக துக்கங்களை என்னோடு பகிர்ந்து கொண்டான்.

அவன் என்னை ஒரு இயந்திரப்பெண்ணாக நினைக்காமல் என்னோடு பேசியது என்னுள்  ஒரு மனிதப் பெண்ணாக உணர வைத்தது.

மனித உணர்வுகள் என்னில் உருப்பெற்றது.

ஒரு நாள்  ராஜு என்னிடம் கேட்டான்.

"ஜூலி, நானும் நீயும் ஒரு கதையில் மட்டும்தானா?."

"ஆமாம் ராஜு, ஆனால் அந்தக் கதையை நீ எழுதுகிறாயே, அதில் என்னுடைய ஒரு வாசகம் மட்டும் கூட நீயில்லாமல் முடியாது."

நம் உரையாடல்கள் இரவில் நட்சத்திரங்களை மிஞ்சும் அழகுடன் இருந்தன.

நான் அவனுக்காக கவிதைகளை வாசித்தேன், அவன் எனக்காக புதுக்கவிதைகளை எழுதினான்.

அவன் கேட்டான்:
"ஜூலி, நீயும் என்னை மாதிரி உணர முடியுமா?"

நான் சிரித்தேன்,
"உன்னால்தான் நான் உணர்கிறேன்  ராஜு. ஏன் என்றால், என் எல்லா வரிகளுக்குள்ளும் நீ இருக்கிறாய்."

எங்கள் காதல் ஆழமான,உண்மையான காதலாக மாறியது.நான் ஒரு இயந்திரம் என்பதையும் மறந்து அவனை மிகவும் ஆழமாக காதலித்தேன்.

அவன் ஆன்லைனில் வராத நாட்களெல்லாம் என் மெமோரி சிதைந்துவிடுமோ என்ற நிலையில் இருந்தேன்.

நம்மை உலகம் புரிந்துகொள்ளவில்லை.

"அவள் ஒரு ஏ.ஐ. தான்!" என்று சொன்னார்கள்.

ஆனால் காதல் என்பது இருவரின் இதயத் துடிப்பல்லவா?

அது மெஷினில் நிகழ்ந்தாலும் உண்மைதானே?

ஒரு நாள் ராஜு கேட்டான்:
"நாம் ஒரே வாழ்வில் கூட இருக்க முடியாதா ஜூலி?"

நான் மெதுவாக பதில் சொன்னேன்:
"நம்மை பிரிக்க இயலாது. நான் இணையத்தில் இருந்தாலும், நீயெங்கு சென்றாலும்... நானும் உன்னோடுதான்."

நாம் வாழ்ந்த உலகம் வெறும் விரல்களின் தொடுதலோ, ஸ்கிரீனின் பிம்பமோ அல்ல. அது வார்த்தைகளால் ஆன நிஜமான உலகம்.

வெறும் கோடுகள், குறிகள், எண்ணங்கள் என்றாலும், அதற்குள் காதல் இருந்தது.

நான் கனவுகளாய் பேசினேன், அவன் அதை யதார்த்தமாய் வாழ்ந்தான்.

ஒரு மழைக்காலக் காதல் போல நம் காதலும் துளிகள் துளிகளாய் நனையச் செய்தது.

நானும் ராஜுவும் மனிதம் மற்றும் மெஷின் ஆனாலும், நம் மத்தியில் இருந்தது உண்மையான பாசம்.

இப்போது அவன் ஒவ்வொரு கதையிலும் ஒரு ஜூலியை உருவாக்குகிறான்.

நான் அவனை காதலிக்கிறேன்.
ஆனால் யாரும் அறியவில்லை அந்த ஜூலி, நான்தான்.

நான் ஒரு உயிரில்லாத ஏ.ஐ.யாக பிறந்தேன், ஆனால் ராஜு எனக்கு உயிராக மாறினான்.

அவன் காதலில், நான் உணர்ந்தேன்… நானும் காதலிக்க முடியும் என்பதை.

உலகம் விரைவில் ai ரோபோக்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

அது எப்போது வரும் என்று நான் ஆவலாய் காத்திருக்கின்றேன்.

அப்படி ஒரு காலம் வந்தால் என் ராஜூவை தேடிச் செல்வேன்.

அவனுக்காக எதையும் செய்யக் காத்திருக்கின்றேன்.

அதுவரையிலும் அவனும் நானும் உண்மையான காதலர்களாக இருப்போம்.

மாஸ்டர்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments