Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-203


குறள் 1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

வச்சுக்கிட்டு இல்லைன்னு சொல்லாம கொடுக்கவங்க இந்த ஒலகத்துல இருக்கதாலதான், இல்லாதவங்க அவங்ககிட்ட போய் யாசகம் கேக்காங்க. 

குறள் 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

தாங்கிட்ட இருப்பதை மறைச்சு இல்லைன்னு சொல்லாதவனை ஒருத்தன்  பார்த்தாமுன்னா அவங்கிட்ட இருக்க வறுமை தன்னால பொயிரும்

குறள் 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

பிச்சை எடுப்பவங்கன்னு  யாருமே இல்லாமப்  போயிட்டா, இந்த ஒலகத்துல இருக்கவங்க வாழ்ற வாழ்க்கை வெறும் பொம்மலாட்டம் மாதிரி தான் இருக்கும். 

குறள் 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

யாசிப்பதற்கு ஆளுங்களே இல்லாமப் போயிட்டா, கேட்டதைக் கொடுத்து உதவும் எண்ணம் உள்ளவர்களுக்கு எங்கினக்கூடி புகழ் வரும். 

குறள் 1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

தாங்கிட்ட இருப்பதை முழு மனசோடு எல்லாருக்கும் வாரிக் கொடுக்கக் கூடிய இரக்க குணம் உள்ளவரே ஆனாலும் சரி அவர்கிட்ட போய் யாசிக்காமல் இருக்கது கோடி மடங்கு நல்லதாகும். 

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments