Ticker

6/recent/ticker-posts

Ad Code



உனக்காக ஏங்கிடும் நெஞ்சம்.!


அன்புள்ள அத்தானுக்கு 
அன்பைக் கொட்டி எழுதவா?
அம்பு விழி சிந்திடும் நீரெடுத்து 
அத்தனையும் கூறிடாவா?  மனமே.

ஆசையிலே ஓர் வார்த்தை.
ஆழமாய் இரு வாங்கியம்.
ஆழ்மனதில் இருந்தெடுத்து 
ஆவாரம் பூவாட்டம் வரையவா?

இதயத் துடிப்பை சொல்லவா?
இளையவளின் ஏக்கத்தைக் கூறவா?
இரவும் பகலும் வரும் பெரும்மூச்சையும் 
இருண்ட பின்னும் வழி பார்ப்பதையும்.

ஈருடலில் ஓரூயிராய் வழ்ந்தவரிடம்.
ஈயம் போலே உருகிடும் உள்ளத்தை.
ஈமச்சடங்கு காணும் முன்னே 
ஈயாட்டம் பறந்து வந்திடு 
என மடலிடவா?

உயிரே நீதானே என்னுலகம்.
உறவாடும் பொன்னுலகம்
உனக்காக ஏங்கிடும் நெஞ்சம்.
உறவாட ஓடி வாஅத்தான் கொஞ்சம்.

ஆர் எஸ் கலா

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments