Ticker

6/recent/ticker-posts

Ad Code



என்னை மாதிரி உலகில் யாருக்கும் அந்த சீட் கிடைச்சுருக்காது.. சிராஜ் வீசிய மாஸ் பந்து குறித்து அம்பயர் தர்மசேனா


இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அத்தொடருக்கு முன் விராட், ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர்கள் ஓய்வு பெற்றனர். அதனால் அத்தொடரில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வியை சந்திக்கும் என்று மைக்கேல் வாகன், கிரேம் ஸ்வான் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகக் கணித்தார்கள்.

ஆனால் முதல் போட்டியிலேயே 5 சதங்கள் அடித்து வரலாறு காணாத சாதனைப் படைத்த இந்திய அணி 7 கேட்ச் தவற விட்டதால் தோல்வியைசிஜி சந்தித்தது. அதற்கெல்லாம் சேர்த்து 2வது போட்டியில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. 3வது போட்டியில் வெறித்தனமாக போராடிய இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் சிக்கிய இந்தியா மிகவும் கடுமையாகப் போராடி வரலாற்றில் மறக்க முடியாத ட்ராவை பதிவு செய்தது. ஓவலில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

அன்றைய நாளில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகள் சாய்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதிலும் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு குறுக்கே நின்ற இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்ஷனை 143 கி.மீ துல்லியமான யார்கர் பந்தால் சிராஜ் கிளீன் போல்ட்டாக்கினார். இந்நிலையில் அந்த கடைசி விக்கெட் பற்றி அப்போட்டியில் நடுவராக இருந்த இலங்கையின் குமார் தர்மசேனா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக முகமது சிராஜ் வீசிய அந்தப் பந்தை உலகில் மற்ற அனைவரைக் காட்டிலும் மிகவும் நெருக்கமாக இருந்து பார்த்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில். “இந்தப் பந்தை வீட்டின் மிகவும் சிறந்த இருக்கையில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று தர்மசேனா பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

முன்னதாக அப்போட்டியில் குமார் தர்மசேனா எல்பிடபுள்யூ முறையில் ஜோ ரூட் உள்ளிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அவுட் கொடுக்காதது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. அதனால் இந்திய ரசிகர்கள் பலரும் அவர் மேலே கோபத்துடன் இருந்தனர். இருப்பினும் கடைசி நாளில் விழுந்த 4 விக்கெட்டுகளில் அவர் கொடுத்த ஒரு “எல்பிடபுள்யூ அம்பயர் கால்” தீர்ப்பு இந்தியாவின் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments