
அலி (ரழி) அவர்கள் ஒரு இடத்திற்கு செல்கிறார்கள். அப்போது அஸர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது அஸர் தொழுக வேண்டும் அப்போது அவர்களிடம் குதிரை இருக்கிறது. அதை யாரிடம் விட்டு செல்வது என்று யோசிக்கிறார்கள் அங்கே ஒரு இளைஞன் ஒருவன் நிற்கிறான் அவனிடம் அலி (ரழி) அவர்கள் கூறினார்கள் அஸர் தொழுது விட்டு வரும் வரை இந்த குதிரையை பார்த்து கொண்டு இரு என்று ஒப்படைத்து விட்டு அவர்கள் தொழுகின்றார்கள் .
அலி (ரழி) அவர்கள் தக்பீர் கட்டியதும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது நாம் ஏன் இந்த குதிரையை கலட்டி கொண்டு ஓடிவிட கூடாது ஒரு இருபதாயிரம் தீனார் கிடைக்குமே என்று அவனுடைய உள்ளம் பாவத்தை ஹராமான விடையத்தை தூண்டுகின்றது.
அவன் அந்த குதிரையை இழுக்கிறான் இழுக்கிறான் ஆனால் அது வர மறுக்குகின்றது.
அந்த முட்டாளுக்கு தெரியவில்லை அது பழக்கபட்ட குதிரை அலியை சுமந்த குதிரை ஹைபர் போரில் யூதர்களை வெற்றி வாகை சூடிய குதிரை என்று அவனுக்கு தெரியவில்லை.
இழுக்கிறான் இழுக்கிறான் ஒன்றுமே முடியாத நிலை கடைசி ரகஅத்தில் அலி (ரழி) அவர்கள் இருக்கிறார்கள் கடைசியில் குதிரைக்கு போடக்கூடிய சங்கிலி காப்பு இருக்கும் கிடைத்தது இதுதான் இலாபம் என்று எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
அலி (ரழி) அவர்கள் தொழுகை முடிந்து பார்க்கிறார்கள் ஹைர் மாஷா அல்லாஹ்
ஒன்றும் இல்லை என்று வீட்டுக்கு வருகிறார்கள் வந்து தனது மகன் ஹசனிடம் சொல்கிறார்கள் இப்படி குதிரை விட்டு இருந்தேன் குதிரைக்கு போடக்கூடிய சங்கிலியை எடுத்து கொண்டு சென்று விட்டான் இந்தா ஐந்து தீனாரை கொடுத்து எங்கேயாவது குதிரைக்கு போடக்கூடிய சங்கிலியை வாங்கி விட்டு வா நான் வெளியே செல்ல வேண்டி இருக்கிறது என அனுப்பினார்கள்.
அதை திருடியவன் அந்த சங்கிலியை அங்கே உள்ள சந்தை தொகுதியில் விற்று விட்டான்.
ஹசன் (ரழி) அவர்கள் வருகின்றார்கள் அதே சங்கிலியை ஐந்து தீனாரிற்கு வாங்குகின்றார்கள்.
வாங்கி அலி (ரழி) அவர்களின் கையில் கொடுத்ததும் அலி (ரழி) அவர்கள் சிரித்தார்கள் சிரித்து விட்டு சொன்னார்கள் உண்மையிலேயே இந்த ஐந்து தீனாரை தொழுகை முடிந்து அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன் ஏன் என்றால் அவன் இந்த குதிரையை பார்த்து கொண்டு இருந்தான் என்பதற்காக கூலி கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
அவன் கொஞ்ச நேரம் பொறுமையாக நின்று இருந்தால் அந்த ஐந்து தீனாரை ஹலாலாக கிடைத்திருக்கும் கொஞ்சம் பொறுமையாக இருக்காமல் செய்துவிட்டு சென்று விட்டானே அது ஹராம் ஆகிவிட்டதா ? இல்லையா? அதே ஐந்து தீனார் தான் அனால் ஹராம்.
இன்று நமது இளம் சமுதாயம் காதலர் தினம் என்ற பெயரில் அல்லாஹ் ஹராமாக ஆக்கிய இசை மற்றும் ஆண் பெண் கலப்பு இன்று சர்வ சாதாரணமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் நம்மை பாதுகாப்பாக வேண்டும் .
அல்லாஹ் ஹலாலை தரும் வரை பொறுமையாக இருக்க கூடிய உள்ளங்களாக நமது உள்ளத்தை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments