Ticker

6/recent/ticker-posts

Ad Code



மனித இயந்திரங்களிடையே குத்துச்சண்டை: பிரமிப்பில் பார்வையாளர்கள்


சீனாவில் நடைபெற்ற மனித இயந்திரக் குத்துச்சண்டை போட்டி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

'2025 World Robot Conference' என்ற மாநாட்டின் ஓர் அங்கமாகக் குத்துச் சண்டை போட்டி இடம்பெற்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குத்து சண்டை வளையத்தைச் சுற்றி நின்று சண்டையை ரசித்தனர்.

பத்தாம் முறையாக நடைபெறும் அந்த மாநாட்டில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

அங்கு 1,500க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் உள்ளன.

மனித இயந்திரங்கள் ஆடுவதையும் காற்பந்து விளையாடுவதையும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

முதியவர்களுக்கு உதவக் கூடிய மனித இயந்திரங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments