
பிள்ளைகளின் அருமை பெற்றவர்களுக்கு தான் தெரியும், தொண்டர்களுக்கே பாதுகாக்க கொடுக்க முடியாத தவெக தலைவர் விஜயால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று மதுரை மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட தொண்டரின் தாய் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும் விஜயின் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாநாட்டில் விஜய் தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு நடைமேடையில் நடந்து வரும் போது உற்சாக மிகுதியால் தொண்டர், ஒருவர் நடைமேடையில் ஏறி விஜய் அருகே சென்றார். அதனைப் பார்த்த பாதுகாவலர்கள் அவரைக் குண்டு கட்டாக தூக்கி வீசினர். இதனைத் தொடர்ந்து அந்த தொண்டர் நடைமேடையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த கம்பியை பிடித்தவாறு தொங்கி பிறகு மெதுவாக கீழே இறங்கினார். இந்த காட்சிகள் தொண்டர்களால் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரல் ஆகி வந்தது.
இந்நிலையில் அவ்வாறு தூக்கி வீசப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோசம் என்பவரின் மகன் சரத்குமார்(20) என்பது தெரியவந்தது வந்துள்ளது. இதுகுறித்து சரத்குமாரின் தாயார் சந்தோசத்திடம் கேட்டபோது, திருச்சியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு என் மகன் மதுரைக்கு சென்று விட்டான். இது குறித்து அவரிடம் விசாரித்தேன். மேலும் மதுரையில் இருப்பதாகவும், சாப்பிட்டதாகவும் பத்திரமாக இருப்பதாகவும், எனது மகன் தெரிவித்தான்.
ஆர்வம் மிகுதியால் விஜய் நடைமேடையில் நடந்து வரும் பொழுது அவரின் அருகே செல்ல முயற்சித்த போது, அவரது பாதுகாவலர்கள் எனது மகனை குண்டு கட்டாக தூக்கி கீழே வீசினர். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆசையாகவும் ஆர்வமாகவும் சென்றவரை ஒதுக்கிவிடலாம் அல்லது ஓரமாக செல் என்று தள்ளி நிற்க வைக்கலாம். அதனைவிடுத்து என் மகனை தூக்கி வீசியதால், கை கால் ஒடிந்து இருந்தாலும் அல்லது என் மகன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு இருந்தால் யார் பதில் சொல்வது. என் மகனை எனக்கு யார் திருப்பி தருவார்கள்.
என் மகன் எனக்கு செய்வதை உங்களால் செய்ய முடியுமா, நான் என் தொண்டர்களுக்கு அண்ணனாகவும் சகோதரனாகவும் இருக்கிறேன். அவர்களது குழந்தைகளை மாமனாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் விஜய் இவ்வாறு செய்யலாமா என்று கேள்வி எழுப்பினார். மற்றவர்களை பார்த்து குற்றம் சொல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்ய வேண்டும். உங்களை பார்க்க வந்தவர்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை, பிறகு நீங்கள் ஆட்சிக்கு வந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பாய் என்றார்.
மதுரை மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள், அவர்கள் வயசு பசங்க மாநாட்டிற்கு, வந்த இரண்டு பேர் இறந்து விட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். ஒருவேளை பணம் கொடுத்தால் அதற்கு ஈடாகிவிடுமா. அந்த மகன் செய்யும் அனைத்தையும் உங்களால் அந்த பெற்றோர்களுக்கு செய்ய முடியுமா என்றார். கட்சிக்காக வருபவர்களை அனுசரித்து செல்ல வேண்டுமே தவிர ஒரு உயிர் என்றும் பாராமல் தூக்கி வீசிக்கூடாது,. அந்தப் பிள்ளையை எவ்வாறு வளத்திருப்போம் அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம் என்பது பெற்றோர்களுக்கு தான் தெரியுமே தவிர மற்றவர்களுக்கு தெரியாது.
எங்கள் கிராமத்துக்காரர்கள் உன் மகன் எதற்காக மாநாட்டிற்கு சென்றான் என்று கேட்கிறார்கள். போனது தவறுதான், நான் போக வேண்டாம் விஜய்க்காக ஓட்டு போடு என்று என் மகனிடம் சொன்னேன். அவன் கேட்கவில்லை ஏதோ ஆர்வம் மிகுதியாக சென்று விட்டான். அப்படி ஆர்வத்துடன் வந்தவர்களுக்கு இப்படி தான் செய்வதா? பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளையை வளர்க்கப்பட்ட பாடு, நான் என் கணவர் இல்லாமல் எனது 3 குழந்தைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பேன் என்று எனக்குத் தான் தெரியும் என்றார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments