
சுப்பன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் வெளிப்படுத்திய இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரது மத்தியிலும் பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டனாக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய சுப்மன் கில்லுக்கு தற்போது இந்திய டி20 அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமின்றி எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் பதவி கிடைத்துள்ளது. இதன் காரணமாக அக்சர் பட்டேல் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய துணை கேப்டன் பதவியை சுப்மான கில் பெற்றுள்ளார்.
இப்படி அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது சிலர் மத்தியில் விமர்சனங்களை பெற்றாலும் பலரும் அவர் இந்த துணை கேப்டன் பதவிக்கு தகுதியானவர்தான் என்று தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆசிய கோப்பை தொடருக்கான துணை கேப்டனாக தேர்வாகியுள்ள சுப்மன் கில்லை வாழ்த்தி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில்லுடன் இணைந்து நான் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். அதிலும் குறிப்பாக இந்திய ஏ அணியில் இருந்து நாங்கள் தொடர்ச்சியாக ஒன்றாக பயணித்து வருகிறோம். களத்தில் மட்டுமின்றி களத்திற்கு வெளியேயும் எங்களது உறவு மிக வலுவாக உள்ளது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது நானும் சுப்மன் கில்லும் ஒன்றாகத்தான் அறிமுகமானோம்.
அதே போன்று இந்திய அணி ஒருநாள் தர வரிசையில் முதலிடத்திற்கு சென்றபோதும் நாங்கள் அணியில் இருந்தோம். இப்படி எங்களுக்குள் நல்ல நினைவுகள் நிறைய இருக்கின்றன. தற்போதைய குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் எனது கேப்டனாக சுப்மன் கில் தான் இருக்கிறார். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அவரை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி தான்.
ஒரு கேப்டனாக அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். அவர் இவ்வளவு தூரம் வந்து இன்று இந்திய அணியின் கேப்டனாகும் அளவிற்கு முன்னேறியுள்ளதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். நிச்சயம் அவர் ஆசிய கோப்பை தொடரை வென்று அந்த டிராபியுடன் மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று தான் வாழ்த்துவதாக சுப்மன் கில் குறித்து முகமது சிராஜ் பேசியது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments