
சிங்கப்பூரில் ஓர் ஆடவர் திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சக ஊழியரைத் திருமணம் செய்தார்.
இரண்டாவது மனைவியின் பிரசவத்துக்காக முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர் பிடிபட்டார்.
இரண்டு முறை திருமணம் செய்த குற்றத்துக்காக இந்தியாவைச் சேர்ந்த 49 வயது வைத்தியலிங்கம் முத்துகுமாருக்கு 3 மாதம் 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வைத்தியலிங்கம் முதல் மனைவியை 2007ஆம் ஆண்டு மணந்தார்.
2011ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூருக்கு வேலைபார்க்க வந்தார். அப்போது அவர் தன் சக ஊழியர் சால்மா பீ அப்துல் ரசாக்குடன் (Salmah Bee Abdul Razak) பழகத் தொடங்கினார்.
வைத்தியலிங்கத்திற்கு ஏற்கனவே திருமணமானது சால்மாவுக்குத் தெரிந்திருந்தது. இருப்பினும் 2022ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக வைத்தியலிங்கம் உறுதியளித்திருந்தார்.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் நாகூரில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தனர்.
2023ஆம் ஆண்டு சால்மாவுக்கு மகன் பிறந்தபோது வைத்தியலிங்கம் மகனைக் காண KK மகளிர், சிறார் மருத்துவனைக்குச் சென்றார். அப்போது அவர் முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்டார்.
வைத்தியலிங்கம் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பித்தபோது தன் முதல் மனைவியை ஆதரவாளராக நியமித்தார். மேலும் அவர் வேறு யாரையும் மணக்கவில்லை என்று பொய்த்தகவலை வழங்கினார்.
முதல் மனைவியைவிட்டுப் பிரிந்து வராததால் சால்மா வைத்தியலிங்கத்துக்கு எதிராக மனிதவள அமைச்சிடம் புகாரளித்தார்.
சட்டத்துக்குப் புறம்பாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அதிகபட்சம் 7 ஆண்டுச்சிறையும் 10,000 வெள்ளிவரை அபராதமும் விதிக்கப்படலாம்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments