Ticker

6/recent/ticker-posts

Ad Code



இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஐந்தாண்டு போட்டித்தடை தடை


ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட முன்னாள் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலிய சமனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13, 2023 முதல் சமன் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். 2021 அபுதாபி டி 10 போட்டியின் போது விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட புனே டெவில்ஸ் அணியின் 8 வீரர்களில் அவரும் ஒருவராவார்.

சமனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளின் மூன்று பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளில் உள்ள சட்டங்களின்படி,

2.1.1 - 2021 அபுதாபி டி 10 போட்டிகளை அல்லது போட்டிகளின் தன்மைகளை மாற்ற, சதி செய்யதல் மற்றும் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.

2.1.3 – விதிகளில் மாற்றம் செய்வதற்காக ஊழலில் ஈடுபடும் ஒரு வீரரின் சார்பாக மற்றொரு பங்கேற்பாளருக்கு பரிசு வழங்குதல்.

2.1.4 – விதிகளின் பிரிவு 2.1 ஐ மீறுவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டுகோள் விடுத்தல், தூண்டுதல், ஆலோசனை வழங்குதல், வற்புறுத்துதல், ஊக்குவித்தல் அல்லது தெரிந்தே உதவுதல்,போன்ற மூன்று பிரிவுகளில் குற்றம் சாற்றப்பட்டுள்ளார்.

101 முதல் தர போட்டிகள், 77 A போட்டிகள் மற்றும் 47 T20 போட்டிகளில் விளையாடிய சகலதுறை ஆட்டக்காரரான 39 வயதான சமன் கடைசியாக மார்ச் 2021 இல் இலங்கை கிரிக்கெட் T20 தொடரில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போட்டியில் விளையாடியுள்ளார்.

tamilwin

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments